Regional02

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா 2-வது ஆண்டாக ரத்து :

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடுதலுடன் தொடங்கி 29 நாட்கள் நடைபெறும். இதில் 18-வது நாளில் கம்பம் ஆற்றில் விடும் விழா விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு வைகாசி திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதேபோல, நிகழாண்டு இன்று (மே 9) தொடங்கி நடைபெற வேண்டிய வைகாசி உற்சவம், கரோனா பரவல் காரணமாக 2-வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு கரூர் மாரியம்மன் கோயில் முன் வைக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக அரசு கோயில் விழாக்களுக்கு தடை விதித்திருப்பதால் திருவிழா நடைபெறவில்லை. எனவே, திருவிழா காலத்தில் பக்தர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்த்து தங்கள் வீடுகளிலேயே வழிபாடு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT