Regional02

குன்னூரில் 85 மி.மீ. மழை பதிவு :

செய்திப்பிரிவு

உதகை, கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டியது. குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ட்ரம்ளா பகுதியில் நெடுஞ் சாலைத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து, சாலையில் விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

பொக்லைன் உதவியுடன் இடிபாடுகளை அகற்றியபின்பு, போக்கு வரத்து சீரமைக்கப் பட்டது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி மாவட்டத் தில் அதிக பட்சமாக குன்னூரில் 85 மி.மீ. மழை பெய்துள்ளது. உலிக்கல், எடப்பள்ளி, குன்னூர் ஊரகப் பகுதிகளில் தலா 75, கீழ் கோத்தகிரியில் 69, பர்லியாறில் 58, கோத்தகிரியில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT