எம்.பலராமமூர்த்தி 
Regional02

சென்னை அணுமின் நிலையத்துக்கு - புதிய இயக்குநர் நியமனம் :

செய்திப்பிரிவு

கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பணி ஒய்வு பெற்றதால், புதிய இயக்குநராக எம்.பலராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கிவரும் சென்னை அணுமின் நிலையத்தில் அலகு 1 மற்றும் அலகு 2 என இரு பிரிவுகள் உள்ளன. ஒவ்வோர் அலகிலும் தலா 220 மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

இந்த அணுமின் நிலையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வந்த எம்.னிவாஸ் ஏப்ரல் மாத இறுதியில் பணி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, புதிய இயக்குநராக எலட்ரானிக்ஸ் பொறியியல் பட்டதாரியான எம்.பலராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர், ராஜஸ்தான் அணுமின் நிலையத்தின் 5 மற்றும் 6 ஆகிய பிரிவுகளின் பராமரிப்பு கண்காணிப்பாளராகவும் முதன்மை கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், சென்னை அணுமின் நிலையத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் மற்றும் கன்ட்ரோல் சிஸ்டத்தை புதுமைப்படுத்துதல் மற்றும் பொறியியல், கொள்முதல் குழுமத்தை நிறுவுதலில் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.

இவர், அணுவாற்றல் தொழில் துறையில் நிறுவுதல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் 35 ஆண்டு கால அனுபவம் கொண்டவர்.

SCROLL FOR NEXT