பெரம்பலூர்: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளராக திரைப்பட இயக்குநரும், நடிகரும், தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கவுதமன் போட்டியிட்டார். அவர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து, தீவிரமாக வாக்கு சேகரித்தார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் தனக்கு பதிவான 5 தபால் வாக்குகளையும் சேர்த்து, அவர் 336 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேர், இவரைவிட அதிக வாக்குகள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.