புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றாளர்களை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மக்க ளவை உறுப்பினர் வைத்திலிங்கம், ஆளுநர் தமிழிசையை நேற்று சந்தித்து கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி னார்.
அப்போது அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சேரும் நோயாளி களிகளுக்கு ரெம்டெசிவர் மருந்துஅளித்து சிகிச்சை அளிப்பதைப்போல் தனியார் மருத்துவமனை களில் சேரும் நோயாளிகளுக்கும் ரெம்டெசிவர் மருந்து கிடைக்கச் செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அறியாமல், சாதாரண காய்ச்சல் என நினைத்து வீட்டிலேயே மாத்திரை சாப்பிட்டு, சிகிச்சை மேற்கொள்கின்றனர். சில தினங்கள் கழித்து கரோனா தீவிரமானவுடன் அபாயக் கட்டத்தில் உறவினர்களால் மருத் துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இது கரோனா தொற்று பரவலுக்கு வழி வகுப்பதுடன், சிலர் இறப்புக்கும் காரணமாகி விடுகிறது. எனவே கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் மூலம் காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். அதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதாரத்துறையில் மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்து, தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.