தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க எண்கள் அறிவிப்பு : நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தகவல்

By செய்திப்பிரிவு

தேர்தல் குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று (ஏப்.6) நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 1800-425-0034 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 0423-2450035, 0423-2450036, 0423-2450037 கொண்ட கட்டுப்பாட்டு அறை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. தேர்தல் புகார்களை பதிவுசெய்ய அல்லது தேர்தல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார்தாரருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். ‘சி-விஜில்’ செயலியிலும் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் வாக்காளர் உதவி மையத்தை 0423-1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்தல் தொடர்பான புகார்களை, தேர்தல் பார்வையாளர்களான ராகுல் திவாரி 9498748322, பனுதர் பெஹரா 9498748323, செலவினப் பார்வையாளர்கள் விஷால் எம்.சனாப் 9498748321, அமர் சிங் நெஹரா 9498748320, காவல்துறை பார்வையாளர் ரஞ்சித் குமார் மிஸ்ரா 9498748325, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் 0423-2441154, 9444166000, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 0423-2223839, 9498111113, கோட்டாட்சியர், உதகை சட்டப்பேரவைத் தொகுதி- 0423-2445577, 94454 61804 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.

மேலும், கோட்டாட்சியர், கூடலூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி - 04262-261295,94450 00437, கோட்டாட்சியர், குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி- 0423-2206002, 94450 00438, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (உதகை) - 0423 2442433, 94450 00559, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (குந்தா) - 0423 2508123, 94450 00560, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (கூடலூர்) - 04262 261252, 9445000557, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (பந்தலூர்) - 04262 220734, 9445000558, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (குன்னூர்) - 0423 2206102, 9445000562, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (கோத்தகிரி) - 04266 271718, 9445000561 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

காவல்துறை தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 0423-2223055 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். தவறாமல் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி, 100 சதவீத வாக்களிப்பை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்