சிவகங்கை, உருவாட்டியில் பங்குனி உத்திர தேரோட்டம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை, உருவாட்டியில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் நடந்தது.

சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 18-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மார்ச் 19-ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து தினமும் இரவில் சுவாமி ரிஷப, மயில், யானை, குதிரை, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். மார்ச் 26-ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கி பிரதான வீதிகளில் சுற்றி வந்து நிலையை அடைந்தது. இன்று தீர்த்த வாரியும், இரவு 10 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கின்றன.

உருவாட்டியில் தேரோட்டம்

காளையார்கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.

நேற்று காலை 5 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருள காலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் பறவைக் காவடி, மயில் காவடி, அக்கினிச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும், கரும்புத் தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

12 mins ago

கல்வி

26 mins ago

சினிமா

34 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

38 mins ago

விளையாட்டு

54 mins ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்