கயத்தாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 19-ம் தேதி காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸார் சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில் அய்யனார்ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகனும், கருப்பட்டி வியாபாரியுமான பொன்னுச்சாமி(19) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் பொன்னுச்சாமி மற்றும் மாயமான சிறுமி ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கயத்தாறு போலீஸார் பிடித்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பொன்னுச்சாமி சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. போக்ஸோ சட்டத்தில் அவரை போலீஸார் கைது செய்தனர்.