Regional02

பணத்திற்காக யாரையும் தேர்ந்தெடுக்காதீர்கள் - ‘வாக்குக்கு பணம் கொடுத்து சத்தியம் செய்யச் சொல்வார்கள்!!’ : பெண் வாக்காளர்களிடம் வேல்முருகன் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

பண்ருட்டி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக தமிழகவாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் போட்டியிடு கிறார்.

பண்ருட்டி பகுதியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள், தன்னார்வ அமைப்பினரை நேற்றுசந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களிடம், வாக்கு சேகரிக்கும் போது, கடந்த காலங்களில் தான் செய்த நலத்திட்ட உதவிகளை சுட்டிக்காட்டிய வேல்முருகன், தற்போது நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற நீங்கள் உழைக்க வேண்டும். திமுக ஆட்சியமைந்தவுடன் மகளிருக்கான திட்டங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

சில கட்சியினர் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஒரு வாக்குக்கு சில ஆயிரங்களை நிர்ணயித்து, உங்களைத் தேடி வருவார்கள். அந்த சில ஆயிரங்களை உங்கள் கையில் வைத்து திணித்து, ‘அவர்கள் கூறும் சின்னத்துக்கு வாக்களிப்பேன் என சத்தியம் செய்யுங்கள்!’ எனக் கேட்பார்கள். எக்காரணம் கொண்டும் சத்தியம் செய்துவிடாதீர்கள்! பணத்திற்காக யாரையும் தேர்ந்தெடுக்காதீர்கள்! தொகுதியின் பொதுவான பிரச்சினைகளை நான் அறிவேன். என்னைத் தேர்ந்தெடுத்தால் நான் அதை செய்து தருவேன் என்று கூறினார்.

SCROLL FOR NEXT