Regional02

வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஆண்டாள், மாநிலப் பொருளாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஜோசப் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமரி அனந்தன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் அருள்ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இக்கூட்டத்தில், பணி ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, பண்டிகை முன் பணம் ஆகியவற்றை வழங்க வேண்டும். 2015-க்கு முன்பு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு தேக்கநிலை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT