காரைக்கால் மாவட்டம் செல்லூரைச் சேர்ந்தவர் அசோக்(25), கொத்தனார். இவர், நேற்று காலை காரைக்காலில் இருந்து செல்லூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
திருநள்ளாறு அருகே சென்றபோது, எதிரில் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த அசோக், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, கார் ஓட்டுநரான சங்கரன்பந்தலைச் சேர்ந்த சுல்தான் ஆசிப்(45) என்பவர் மீது காரைக்கால் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.