காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இருந்து பெல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட பழைய வாக்குப்பதிவு இயந்திரங்கள். 
Regional02

பழைய இவிஎம் இயந்திரங்கள் திருப்பி அனுப்பிவைப்பு :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இருந்த பயன்படுத்த முடியாத பழைய வாக்குப்பதிவு இயந்திரங்கள் நந்தம்பாக்கம் பெல் நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் அவை அழிக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த சேமிப்புக் கிடங்கில் பயன்படுத்த முடியாத பழைய வாக்குப்பதிவு இயந்திரங்களும் இருந்தன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி முன்னிலையில் பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், உதவி தேர்தல் அலுவலர் நிர்மலா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இந்த இயந்திரங்கள் அனைத்தும் அழிக்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT