Regional02

கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் :

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை அரசு கலைக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதைக் கண்டித்து முதலாம் ஆண்டு மாணவர்கள், விருதுநகர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அருப்புக்கோட்டை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களிடமும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தைத் திருப்பித்தரக் கோரியும், கூடுதல் கட்டணம் வசூலித்த கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாணவர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து, மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், இதுகுறித்து அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப் பதாகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT