Regional02

தீவிபத்தில் 4 வீடுகள் சேதம், பெண் காயம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் ஞானையா தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் டேனியல் (70). இவருக்கு அப்பகுதியில் 5 வீடுகள் உள்ளன. இதில் 3 வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார்.

இதில் வசந்தகுமாரி என்பவரது வீட்டிலிருந்து நேற்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்தவர்கள் அலறியவாறு வெளியே ஓடி வந்தனர். வசந்தகுமாரிக்கு உடலில் தீக்காயம் ஏற்படட்டது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதமாயின. உயர் மின் அழுத்தம் காரணமாக வசந்தகுமாரியின் வீட்டில் இருந்த டிவி வெடித்துச் சிதறியதே தீ விபத்துக்கு காரணம் எனத் தெரிகிறது. இதுகுறித்து வடசேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT