காக்களூர் - புட்லூர் சாலையில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகள் எரிப்பு புகையால் பொதுமக்கள் அவதி

By செய்திப்பிரிவு

காக்களூர் - புட்லூர் சாலையில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகள் எரிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகிஉள்ளனர்.

தற்போது வளர்ந்து வரும் பகுதியாக உள்ள திருவள்ளூரை அடுத்த காக்களூரில் ஆஞ்சநேயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வீடுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் காக்களூர் - புட்லூர்சாலை ஓரத்தில் கொட்டி எரித்து வருகின்றனர். குடியிருப்புகளுக்கு அருகிலேயே இவ்வாறு குப்பையைக் கொட்டுவதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வீடுகளில் சேரும்குப்பையை தூய்மை பணியாளர்கள் சேகரித்து, அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டாமல், சாலையோரத்தில் கொட்டி எரிக்கின்றனர். இதனால், அருகில் உள்ளகுடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, ஊராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்