ஜோதிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

By செய்திப்பிரிவு

போச்சம்பள்ளி அருகே ஜோதிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நடுபழனி ஆண்டவர், புவனேஸ்வரி அம்மன், ஜோதிலிங்கேஸ்வரர், விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை கணபதி பூஜை, புண்ணியாகவாஸம், 108 மூலிகை திரிவயாகுதி, பூர்ணாகுதி உபச்சாரம், திருமுறை விண்ணப்பம், வாழ்த்து மஹா தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து கருமலை நடுபழனி ஆண்டவர், புவனேஸ்வரி அம்பாள் சமேத ஜோதிலிங்கேஸ்வரர் சகித பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. முன்னதாக கிராம மக்கள் சீர் வரிசையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

பூமி பூஜை

போச்சம்பள்ளி அருகே வலசகவுண்டனூர் கிராமத்தில் 50 ஆண்டு பழமையான தலகட்டு முனியப்பன் கோயிலுக்கு, கோயில் கட்ட பூமி பூஜை நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார் பங்கேற்று, 12 அடி நீளம் கொண்ட திரிசூலம் ஊன்றி பணியைத் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த யாகத்தில் எம்பி செல்லகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேகர், வழக்கறிஞர் காசிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்