நாகை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக, நாகப்பட்டினம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இந்தச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகை மின்சார வாரிய அலுவலகம் எதிரே நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். தகவலறிந்து வந்த நாகை நகர போலீஸார் மறி யலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர்.