அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு குறித்துஅறிவிப்போம், தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் திருமண மண்ட பத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் வேலூர் மண்டல நிர்வாகிகளுக் கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமை வகித்தார். சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சி யின் தலைவர் சரத்குமார், கட்சி நிர்வாகிகளுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணி அமைப்பது குறித்த ஆலோசனைகளை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறும்போது, "புது டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டம் குறித்தும், எதிர் காலத்தில் வேளாண் திட்டங்களில் உள்ள பயன்கள் குறித்து அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.
சமத்துவ மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க தனி குழு ஒன்றை அமைத்துள்ளோம். இக்குழுவினர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துகளை கேட்பார்கள். தேர்தலை யொட்டி தமிழகத்தில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன் பிறகு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
சமத்துவ மக்கள் கட்சி தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. அதிமுக கூட்டணியில் எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு முடிவு செய்வோம். அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருந்தாலும் தேர்தலில் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.
தமிழகத்தில் அதிமுக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. தமிழக அரசு அனைத்து துறைகளிலும் முதன்மை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் தேர்தல் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப்பெறுவது உறுதி’’ என்றார்.