கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி இளைஞர், சிறுவன் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகன் கவுதம் (18), மணி மகன் அப்பு (17). இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலைக்கோட்டலம் கிராமத்தில் வசித்து வந்த இவர்களின் தாத்தாவான தங்கராசு உயிரிழந்தார். அவரது ஈமச்சடங்கு நிகழ்வுக்காக சொந்த ஊர் வந்திருத்த கவுதமும், அப்புவும், நேற்று நண்பர்களுடன் சேர்ந்து அதேபகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். குட்டையில் இறங்கியபோது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

38 mins ago

வாழ்வியல்

47 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்