வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நவம்பர் 26-ம் தேதி தமிழகத்தில் 500 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பின்ன்ர, செய்தியாளர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது: வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நவம்பர் 26-ம் தேதி 500 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

சிவகங்கை

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சாந்திராணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கண்ணகி பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்