ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிருஷ்ணகிரியில் 16-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் வரும் 16-ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெறுவதையொட்டி, ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா வினையொட்டி, கிருஷ்ணகிரியில் வரும் 16-ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், இளைஞர் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ மூலம் பிரச்சாரத்தை நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தொடங்கி வைத்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் முன்னிலை வகித்தார்.

அப்போது ஆட்சியர் கூறியதாவது:

மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையம், ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு வி ழாவினையொட்டி வரும் 16-ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பொதுமக்கள், வேலைநாடுநர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் பேருக்கு பணி

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இதில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து வித கல்வித் தகுதி யினரும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பணிகளை தேர்வு செய்து கொள்ளலாம், என்றார்.

இந்நிகழ்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

உலகம்

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்