மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் விஜய் திவாஸ் நினைவு தினம் (டிச. 16) மற்றும் பட்டதாரி ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றி 15 ஆண்டுகள் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுத் தந்த பணி நிறைவு பெற்ற சலாலுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளி தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு, பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
6 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
12 mins ago
ஆன்மிகம்
22 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வணிகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago