ஒப்பந்த அடிப்படையில் சேலம் மாவட்ட சுகாதார ஆலோசகர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட சுகாதார ஆலோசகர் தற்காலிக பணியிடத்துக்கு மாத ஊதியம் ரூ.40,000 வழங்கப்படும். இப்பணிக்கு வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு பல் மருத்துவம், ஆயுஷ், நர்சிங், சோசியல் சயின்ஸ், லைஃப் சயின்ஸ் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு, முதுகலை மருத்துவ நிர்வாகம், பொது சுகாதாரம், சுகாதார மேலாண்மை, உள்ளிட்ட கல்வி தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.
இப்பணிக்கான விண்ணப்பம் சேலம் மாவட்ட வலைதளத்தில் (salem.nic.in/notice_category/recruitment/) வெளியிடப்பட்டுள்ளன. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இப்பணி ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணியிடமாகும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்களை வரும் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
14 mins ago
சுற்றுலா
17 mins ago
வணிகம்
6 hours ago
இந்தியா
42 mins ago
சினிமா
37 mins ago
தமிழகம்
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago