ஆம்பூர்: ஆம்பூர் நகராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்பூர் நகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலத்தை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் ஷகிலா வரவேற்றார். முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற ஊர்வலத்தில் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.