கரோனா தொற்றால் போக்சோ வழக்குகள் அதிகரிப்பு : சிவகங்கை ஆட்சியர் வேதனை

By செய்திப்பிரிவு

சிவகங்கையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். மாங்குடி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கானொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கிப் பேசியதாவது: மாவட்டத்தில் 2,248 மகளிர் குழுக்களுக்கு ரூ.98.87 கோடி வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. முதற்கட்டமாக 404 குழுக்களுக்கு 1.17 கோடியில் கடனுதவி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டில் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து 21 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். குழந்தைத் திருமணம் செய்து வைக்கக் கூடாது, என்றார்.

மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் வானதி, மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் நாகநாதன், கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜீனு, முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

14 mins ago

சினிமா

43 mins ago

க்ரைம்

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

37 mins ago

தொழில்நுட்பம்

19 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்