Regional01

சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்கள் :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை 360 சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணா மலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, டிசம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை ஒரு ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் என 18 ஊராட்சி ஒன்றியங்களில் 360 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இம்முகாம்களில் உடல் நிலை பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது, குடற்புழு நீக்கம் செய்வது, தடுப்பூசி செலுத்துவது, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம், சினை சரிபார்ப்பு உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அளிக்கப்படும். கால்நடைகளை வளர்ப்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு கால்நடை வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர். மேலும், கிடேரி கன்று பேரணி நடத்தி முதல் மூன்று கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT