நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி உட்பட 9 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களால் மொத்தம் 17 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலை வரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான நஷீர் அகமது தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ். சமீனா, 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. தீபா, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி. விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எம். அமிர்தவேலு, கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஏ.பிஸ்மிதா, உரிமையியல் நீதிபதி சுப்பையா, நீதித்துறை நடுவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 6,032 வழக்குகள் விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 4,012 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.17.53 கோடி வழங்க உத்தரவிடப் பட்டது. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 736 வழக்குகளில் ரூ.1.35 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்