கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
Regional01

போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கல்லூரி, பள்ளிகளில் போக்ஸோ சட்டம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன்படி காவல்கிணறு ராஜாஸ் கல்லூரி, தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரி, கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் துறையினர் மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க 181, 1098 இலவச உதவி எண்களை அழைக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT