Regional01

குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

மதுரை கரிமேடு, அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜய்பிரான்சிஸ் (24). இவர் நகரில் கடத்தல், கொலை முயற்சி வழக்குகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.

அவரது குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டார். இதன்படி, அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை மீனாட்சி திரை யரங்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (34). இவர், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்.

அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவின்பேரில் போலீஸார் கைதுசெய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT