மதுரை பழங்காநத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுடன் சிறப்பு விருந்தினர் மருத்துவர் ராஜேஸ்வரன் உட்பட ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாகிகள். 
Regional01

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி - மதுரையில் குழந்தைகள் சந்திப்பு சிறப்பு நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் உள்ள தனியார் ஓட்டலில் குழந்தைகள் சந்திப்பு எனும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சிறப்பு விருந்தினராக மருத்துவர் ஜி.ராஜேஸ்வரன், கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர்எம். அன்புநிதி, குழந்தைகள் நல பாதுப்பு அலுவலர் விஜயசரவணன், எஸ்விஎஸ் உணவுப் பொருள் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்வி. சூரஜ் சுந்தரஷங்கர், ஜிஆர்டி ஓட்டல் பொதுமேலாளர் என். முகமது ஷெரிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜோ பிரிட்டோ குழந்தைகள் இல்லம், ஜெயின் அன்ஸ் குழந்தைகள் இல்லம்,  காளகேந்திரா ஆர்ட்ஸ் மற்றும் கல்சுரல் அகாடமி ஆகிய ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடு களை ஐஸ்வர்யம் அறக்கட்டளை அறங்காவலர்கள் மருத்துவர்கள் ஆர்.பாலகுருசாமி, எஸ்.சபரி மணிகண்டன் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT