திருச்சி: சட்ட விரோத மது விற்பனையைத் தடுப்பதற்காக மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் அறிவுரையின்பேரில் திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் மேற்பார்வையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸார் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக திருச்சியில் 60, புதுக்கோட்டையில் 48, கரூரில் 52, பெரம்பலூரில் 32, அரியலூரில் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 223 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2.85 லட்சம் மதிப்பிலான 2,345 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.