Regional01

இருமல், காய்ச்சல் இருந்தால் உடன் சிகிச்சை பெற வேண்டுகோள் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதிய வகை உருமாறிய கரோனா வைரஸான `ஒமிக்ரான்' தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப் பட்டு, தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இவ்வைரஸ் தொற்றின் அறிகுறிகளான அதிக உடல் சோர்வு, தொண்டையில் வலி, மிதமான உடல் தசை வலி, வரட்டு இருமல், மிதமான காய்ச்சல் போன்றவை தென் பட்டால், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு மருத்துவமனைகளையும் உடன் அணுகி, உரிய சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT