கரோனாவால் பெற்றோரை இழந்த - 231 குழந்தைகளுக்கு ரூ.7.13 கோடிக்கு நிவாரணம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில் வைப்பு நிதி செலுத்தும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

பராமரிப்பு செலவு ரூ.3 ஆயிரம்

கரோனாவால் பெற்றோரை இழந்து உறவினர் அல்லது பாதுகாவலர் கண்காணிப்பில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளின் பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வங்கியில் வைப்பு தொகை

இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 221 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6.63 கோடியும், தாய் மற்றும் தந்தை என இருவரையும் இழந்த 10 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் 231 குழந்தைகளின் பெயரில் ரூ.7.13 கோடிக்கு வங்கியில் வைப்புத்தொகை செலுத் தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது’’ என வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்