திருக்குறள் முற்றோதுதல் போட்டி :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், திருக்குறள் முற்றோதுதல் போட்டி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி நடைபெறுகிறது. 1,330குறளையும் ஒப்புவிக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவர். போட்டியில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருக்கவேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்கவேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், சிறப்புகள்ஆகியவற்றை அறிந்திருக்கவேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க கூடாது.

விரும்புவோர், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும், மண்டல தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம். அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை பூர்த்தி செய்து, டிசம்பர் 15-ம் தேதிக்கு முன் திருநெல்வேலி, தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

55 mins ago

வாழ்வியல்

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்