Regional01

மாணவி தற்கொலை: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை :

செய்திப்பிரிவு

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ் 2 படித்துவந்த மாணவி கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது. ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் வீ.ராமராஜ், எஸ்.மல்லிகை, சரண்யா ஆகியோர் நேற்று விசாரணை நடத்தினர். மாணவியின் பெற்றோர், நண்பர்கள், பள்ளி நிர்வாகிகள், காவல்துறையினர் என 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் சரஸ்வதி ரங்கசாமி கூறும்போது, “விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT