வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் - 55 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைப்பு : மாவட்ட ஆட்சியர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

By செய்திப்பிரிவு

வேலூர், தி.மலை மாவட்டங்களில் 55 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக காய்சல், சளி, சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மெகா மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அனைத்து நகரம் மற்றும் கிரா மங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 25 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுவினருக்கு 25 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 5 வாகனங்கள் வேலூர் மாநகராட்சி பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரி முதல்வர் செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி, மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அரசு உத்தரவுப்படி மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 25 நடமாடும் மருத்துவக் குழுவினர் செல்ல உள்ளனர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்தால் பொதுமக்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது’’ என்றார்.

திருவண்ணாமலை

வட கிழக்கு பருவ மழையால் தி.மலை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக் கையாக 30 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு குழுவிலும் மருத்துவ அலுவலர், சுகாதார செவிலியர், மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர், மருத்துவப் பணியாளர் என 5 பேர் இடம்பெற்றுள்ளனர். காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சேற்றுப்புண் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கவுள்ளனர்.

இக்குழுவினரின் பணியை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, சுகாதார பணிகள் துணை இயக்கு நர் மருத்துவர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

23 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்