Regional01

ராமநாதபுரம் மாவட்ட ஒருபோக சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மதுரைவீரன், ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திடம் கோரிக்கை மனு அளித்தார்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட ஒருபோக சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மதுரைவீரன், ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் மதுரைவீரன் கூறியதாவது: வைகை அணையில் தற்போது 62 அடி தண்ணீர் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. எனவே, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது தண்ணீர் திறந்துவிட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை பாசனப் பகுதியான 54,000 ஏக்கர் மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரத்தில் 13,687 ஏக்கர் என 67,687 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT