Regional01

விபத்தில் ஊராட்சி செயலர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

சாலை விபத்தில் சிக்கி ஊராட்சி செயலர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே மடப்புரம் விலக்கைச் சேர்ந்தவர் குமார் (36). இவர் விருதுநகர் மாவட்டம், ஆலாத்தூர் ஊராட்சி செயலராக இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

திருப்புவனம் அல்லிநகரம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

திருப்புவனம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT