நாமக்கல்: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டின காளைகள், நாட்டின காளைகள் என்பதற்கு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் சான்றிதழ் பெற வேண்டும்.
இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். இனி ஜல்லிக்கட்டில் நாட்டின காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இறக்குமதி செய்யப்பட்ட காளைகள், கலப்பின காளைகள், உயர்ரக காளைகள் பங்கேற்க முடியாது.
எனவே, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டின காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் சான்றிதழ் பெற வேண்டும். எனவே அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகத்தை அணுகி கால்நடை மருத்துவர், கால்நடை உதவி மருத்துவரிடம் நாட்டின மாடுகள் சான்றிதழ் பெற்ற பின்பே ஜல்லிக்கட்டில் இனி வருங்காலத்தில் பங்கு பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.