100 நாள் வேலைத்திட்டத்தில் - விவசாயம் சார்ந்த பணிகளை கொண்டு வர வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை

By செய்திப்பிரிவு

100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகளையும் கொண்டு வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும், ஏரி, குளங்கள் தூர்வாரப்படுவது, நீர் வழித்தடங்களை சீரமைப்பது, புதிய பண்ணைக் குட்டைகளை அமைப்பது, மரக் கன்றுகள் நட்டு வன வளம் பெருக்குவது போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாய பணிக்கு ஆள் கிடைப்பதில்லை. மக்களை இது சோம்பேறியாக்குகிறது. இந்த வேலைத்திட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று சிலர் நிலவுடைமையாளர்களின் பக்கம் நின்று பேசி வருகின்றனர். இத்தகைய பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளில் வேளாண்மைத் தொழிலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில், ஒருவர் ஓராண்டில், 100 நாட்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வேலை செய்ய முடியும். மற்ற நாட்களில், அந்த ஒருவர் விவசாயம் சார்ந்த பணிகளுக்கோ அல்லது வேறு பணிகளுக்கோ செல்வார்கள்.விவசாய வேலைகளை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு வரலாம். இதன் வாயிலாக, அரசும், நிலவுடைமையாளர்களும் இணைந்து, மக்களுக்கு நலன் தரக்கூடிய சில ஒப்பந்தகளை விதித்து கொள்ளலாம்.

எனவே, 100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடு களை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை என்பதை குறைந்த பட்சம் 250 நாட்களாக உயர்த்தி, அத்தனை நாட்களும் வேலை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலை என்பதை குறைந்த பட்சம் 250 நாட்களாக உயர்த்தி, அத்தனை நாட்களும் வேலை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 secs ago

தமிழகம்

13 mins ago

சினிமா

42 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

36 mins ago

தொழில்நுட்பம்

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்