உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முதல்வரின் சிறப்பான செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள்தொடர்புத் துறையின் சார்பில், நிரந்தரபுகைப்படக் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன்நேற்று திறந்து வைத்தார். பின்னர், தீயணைப்புத் துறை, பேரிடர் மீட்புப்படையினர் சார்பில் நடத்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி செயல்விளக்க நிகழ்ச்சியை பார்வை யிட்டார். பின்னர், அமைச்சர் பேசும்போது, ‘‘அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும்வகையில் இந்த புகைப்பட கண்காட்சிஅரங்கு அமைக்கப் பட்டுள்ளது. செய்திகளை கேட்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் எளிதில் பதியும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், முதல்வரின் சிறப்பான செயல்பாடு கள், திட்டங்களுக்கு கிடைத்த மாபெரும்வெற்றியாகும். பத்திரிகையாளர் நலவாரியம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுஅமைத்து, அதன் செயல்பாடுகள், அதன் மூலம் மேற்கொள்ளப் படும் பணிகள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் போலி பத்திரிகையாளர் களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
பொள்ளாச்சியில் ஆய்வு
பின்னர், அவர் கூறும்போது, ‘‘கொங்கு மண்டலத்தில் பி.ஏ.பிபாசன திட்டம் அமைய காரணமான, வி.கே.பழனிசாமி, என்.மகாலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோருக்கு முழு உருவச்சிலைகள் அமைக்கவும், சி.சுப்பிரமணியம் பெயரில் கலையரங்கம் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான இடங்களை ஆய்வு செய்தேன். அணை திறக்கப்பட்ட தினமானஅக்டோபர் 7- ம் தேதி பரம்பிக்குளம்ஆழியாறு தினமாக கடைப் பிடிக்கப்படும். அந்நாளில் அணை உருவான காலத்தில் முக்கிய பங்காற்றிய பொறியாளர் கே.கே.ராவ்மற்றும் மூவரின் சிலைக்கும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும்’’ என்றார்.