நாமக்கல்: ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், 732 பேர் பங்கேற்றனர்.
முகாமுக்கு, நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என். ராஜேஸ்குமார் முன்னிலை வகித்தார். முகாமை, சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்துப் பேசினார். முகாமில், ஆர்.புதுப்பட்டி அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 732 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு கண் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், 5 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ராஜ்மோகன், மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.