அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பதிவுத் துறைக்கு அதிக எண்ணிக்கையில் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. சொத்துப் பதிவு தொடர்பான புகார்களை பொதுமக்கள் பெரும்பாலும் நேரடியாகவே அளிக்க விரும்புவதால், அரியலூர் மாவட்டப் பதிவாளர்(நிர்வாகம்) அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பதிவு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.