Regional01

ஊழல் வழக்கில் சிக்கியவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை :

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி தில்லைநகரில் உள்ள கட்டுமான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் செயலாளராக இருந்தவர் கார்மேகம். இவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான காலிமனையை கடந்த 2016-ம் ஆண்டு அரசின் வழிகாட்டுதல் மதிப்பைவிட, மிகக் குறைந்த மதிப்பில் விற்பனை செய்து அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கார்மேகம் மீது கடந்த 2020-ம் ஆண்டில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கருமண்டபம் செல்வநகர் பகுதியிலுள்ள கார்மேகத்தின் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் நேற்று சோதனையிட்டனர். அப்போது அங்கு ரூ.2.71 லட்சம் ரொக்கம், 362 கிராம் தங்கம், 386 கிராம் வெள்ளி மற்றும் 147 பவுன் நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்ததற்கான ஆவணங்கள் இருந்தன. அவற்றை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் பதிவு செய்து கொண்டனர்.

SCROLL FOR NEXT