கடலூர் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலருக்கான 5 இடங்களையும் திமுக பிடித்து வெற்றி பெற்றது.

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் காலியாகவுள்ள 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஊராட்சி மன்றத்தலைவர்கள்,12 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.

அந்தந்த பகுதியில் உள்ளஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் குமராட்சி ஒன்றியம் 19-வது வார்டில்(பொது) திமுகவை சேர்ந்த த.சங்கர், பண்ருட்டி ஒன்றியம் 2-வது வார்டில் (பொது பெண்கள்) திமுகவைச் சேர்ந்த ஜெ.ஜெயப்பிரியா, மேல்புவனகிரி ஒன்றியம் 11-வது வார்டில் (ஆதிதிராவிடர் பொது) திமுகவைச் சேர்ந்த ஜெ.கார்த்திகேயன், விருத்தாசலம் ஒன்றியம் 7-வது வார்டில் (பொது பெண்கள்) திமுகவைச் சேர்ந்த ம.சாந்தி, முஷ்ணம் ஒன்றியம் 10-வது வார்டில்(பொது) திமுகவை சேர்ந்த ந.எழிலரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

9 ஊராட்சி மன்றத்தலைவர் களும் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தில்லைநாயகபுரம் ஊராட்சியில் பெண் வேட்பாளர் மகாவதி 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 12 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்