புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த விஸ்வ இந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே. 
Regional01

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும் : விஎச்பி பொதுச் செயலாளர் மிலிந்த் பரந்தே தகவல்

செய்திப்பிரிவு

அயோத்தியில் நடைபெறும் ராமர்கோயில் பிரம்மாண்ட கட்டுமானப்பணிகள் வரும் 2023 டிசம்பரில்நிறைவடையும் என எதிர்பார்க்கி றோம். இந்த மாபெரும் விழாவில் நாட்டு மக்களை பங்கேற்க வைக்க பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். அக்டோபருக்குள் கட்டுமான அடித்தளப் பணிகள் நிறைவடையும் என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அகில உலக பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

கட்டாய மதமாற்றத்தை தடுக்க11 மாநிலங்களில் தடைச் சட்டம் உள்ளது. இந்த தடைச் சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அனைத்துமாநில அரசுகளையும் சந்தித்து இதை வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரியிலும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நாடு முழுவதும் பல மாநிலங் களில் கட்டாய மதமாற்றம் தற்போது அதிகரித்துள்ளது. இதற்காக வெளிநாட்டு நிதி பெருமளவில் வருகிறது. ‘கரோனா சேவை’ என்ற பெயரில் மதமாற்றும் குறிகோளை சிலர் நிறைவேற்றுகின்றனர். இது மிகவும் ஆபத்தான சூழல் என்பதால் இச்சட்டத்தை நிறைவேற்ற கேட்கிறோம்.

மாநில அரசுகள் கோயில்கள் மீது உரிமை கொண்டாடக் கூடாது. இந்து கோயில்கள், திருமடங்களை இந்து சமுதாயத்திடம் அரசுகள் ஒப்படைக்க வேண்டும். இதர மதத்தினரை போல் இந்து கோயில்களையும் இந்து மதத்தினரிடம் தர வேண்டும். பக்தர்கள் தரும் காணிக்கைகளை இந்து மதம் சாராத பணிகளில் பயன்படுத்தக்கூடாது. கோயில் விவகாரங்களில் குறைந்தபட்ச தலையீடு மட்டுமே அரசுக்கு இருக்க சட்டத்தின் வழியே நடவடிக்கை எடுக்கலாம்.

அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்ட கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. கட்டுமான அடித்தளப் பணிகள் அக்டோபருக் குள் நிறைவடையும். 2023ம் ஆண்டு டிசம்பரில் மொத்தப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். அந்த டிசம்பரி லேயே ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும். இந்த மாபெரும் விழாவில் நாட்டு மக்களை பங்கேற்க வைக்கும் விதமாக பல் வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

கரோனா பேரிடர் காலத்தில்பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் தேவையானோருக்கு உணவு, குடும்பங்களுக்கு தேவை யான உதவிகளை செய்துள்ளோம். மருத்துவ வசதிகள், இறுதிச் சடங்கு உட்பட பல்வேறு சேவைகளை செய்துள்ளோம். கிராமப்புறங்களில் மக்களிடையே கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மக்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறோம்." என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது விஎச்பி விஸ்வ இந்து பரிஷன் வட தமிழக செயலாளர் ஞானகுரு, அமைப்பு செயலாளர் ராமன், இணை செயலாளர் ராஜா, சமுதாய நல்லிணக்க அமைப்பாளர் வேல் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT