Regional01

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் :

செய்திப்பிரிவு

மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து காப்பாற்றினர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் செல் வராஜ். திமுக பிரமுகரான இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், முத்துமாரி என்ற 2-வது மனை வியும் உள்ளனர்.

கடந்த ஆண்டு முத்துமாரியிடம் செல்வராஜ் ரூ.2.50 லட்சம் மற்றும் 4 பவுன் நகையை வாங் கினார். இதை சில மாதத்தில் திருப்பி தருவதாக உறுதிமொழி பத்திரத்தில் எழுதிக் கொடுத்திருந்தார். இதற்கிடையே கடந்த ஏப்ரலில் அவர் கரோனா பாதிப்பால் இறந்துவிட்டார்.

இந்நிலையில், முத்துமாரி செல்வராஜிடம் கொடுத்த நகை, பணத்தை முதல் மனைவியான மல்லிகா மற்றும் அவரது மகன் சுப்பிரமணியத்திடம் கேட்டார். ஆனால், அவர்கள் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், மதுரை காவல் ஆணையர் அலுவலகம் வந்த அவர் நேற்று தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து காப்பாற்றினர்.

மேலும் அவரை தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT