பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் துணை கோயில்களான பெரியசாமி- செல்லியம்மன் கோயில், செங்கமலையார் கோயில்கள் சிறுவாச்சூரில் பெரியசாமி மலையில் அமைந்துள்ளன. இங்கு பெரியசாமி, செல்லியம்மன் சிலைகள் மற்றும் செங்கமலையார், கன்னிமார்கள், பரிவார தெய்வங்களின் சுடுமண் சிலைகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று காலை பூசாரிகள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்குச் சென்றபோது, பெரியசாமி மலையில் உள்ள பெரியசாமி, செல்லியம்மன் சிலைகள், செங்கமலையார் கோயிலில் உள்ள கன்னிமார் சிலைகள் மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின்பேரில், பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, சிலைகளை சேதப்படுத்தியது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
ஜோதிடம்
29 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
உலகம்
4 hours ago