Regional01

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை :

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்படும் என தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் தலைமையிலான அலுவலர்கள், காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கடைகள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள், நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் இக்குழுவினர் ஆய்வு நடத்தினர். இதில், 91 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும் இருந்தது தெரியவந்தது.

இந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT