Regional01

மது அருந்துவதால் மனநல பாதிப்பு ஏற்படும்: மருத்துவர் எச்சரிக்கை :

செய்திப்பிரிவு

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மனநல மருத்துவர் வெ.ஜெயந்தி பேசியதாவது:

மனநோயின் அறிகுறிகள் தூக்கமின்மை, பசியின்மை, கவலையுடன் காணப்படுதல், உற்சாகமின்றி தனிமையில் இருத்தல், எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இன்றி இருத்தல் போன்ற பல்வேறு வகையானவை மனநோயாக கருதப்படுகிறது. மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்கள் குறுகிய காலத்திலேயே போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை இழக்கின்றனர்.

குடிப்பழக்கம் என்பது ஒருவனது நடத்தையில் ஏற்படும் மாறுபாடு ஆகும். மது அதிகம் அருந்துவதால் மனநல பாதிப்பு, நடவடிக்கை கோளாறு, ஆளுமை தன்மை மாற்றம் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை குறைத்துக் கொள்ள வேண்டும், என்றார். மனநல ஆலோசகர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT